உச்சந்தலை சுமைகளோடு உச்சிமலை ஏறி இறங்கும் வாழ்க்கையை வாழ்ந்ததில்லையெனினும் அதை உடனிருந்து பார்த்திருக்கிறேன்.
சிறுவயதில் சொக்கநாதன்புத்தூர் வீட்டின் மாடியில் நின்று பார்க்கும்போதெல்லாம் ஊரின் மேல்புறம் உயர்ந்து நிற்கும் இந்த நீலநிறத்து மலை. ஆம் நீலநிறத்தில் தான் தெரியும்.
அதற்கு மேற்குதொடர்ச்சி மலை என்ற பெயர்கூட தெரியாத வயதிலேயே அதைக் காட்டி அதன்மீதேற வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறேன்.
ஆனால் என்னால் நம்பவே முடியாதளவுக்கு இந்த மலையை நேசிக்கத் தொடங்குவேனென எண்ணியதேயில்லை.
வடக்கில் ஏலகிரி மலைதொட்டு தெற்கில் செங்கொட்டை புனலூர் மலை மட்டும் மலையேறி கானுலா போயிருக்கிறேன்.
இந்த உயிர் உடலை இயக்கி விரைய இந்த மலைக்காடுகள் அவ்வப்போது தருகிற உயிர்க்காற்றுக்கு பெரும்பங்குண்டு.
இராசபாளையம் அருகே தேவதானம் மலைப்பாதையில் ஒருமுறை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாயினும் உச்சியேறிப் பார்த்துவிட வேண்டுமெனத் திட்டமிட்டோம்.
நானும் நண்பன் பூபதியும். <3
அப்போது யாருக்கும் தெரியாமல் ஏறத்தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் மேலேயிருந்து ஒருவர் வந்துகொண்டிருந்தார்.
வந்தவர் சும்மா வரவில்லை. சும்மாடு மீது ஒரு மூட்டை! மூட்டையொன்றும் 5 கிலோ, 10 கிலோ இல்லை.
100 கிலோ ஏலக்காய் மூட்டை!
உதவிக்கு ஆளேதுமில்லாமல் ஒற்றையாளாய் நூறுகிலோ எடையை சுமந்தபடி 13 கிமீ தூரத்தை இறங்கி வருகிறார்.
காடு எனில் சாலையிடப்பட்ட காடில்லை. மூன்று பேர் நடக்கத்தகுந்த நான்கடி பாதை. அதுவும் கற்களால் மேடுபள்ளமாக இடப்பட்ட மலையேற்றுப்பாதை.
காடு! அடர்ந்த காடு! விலங்குகள் உலவும் கானுயிர்க்காடு!
ஆற்றுப்பாதையில் நீரருந்த அடிக்கடி ஊர்வந்து போகும் யானைகள் தாராளமாய் உலவும் தகாத காடு!
அந்தக் காட்டில் இடையில் தோள்வலித்தால் இறக்கி வைக்கக்கூட வாய்ப்பில்லாத நிலையில் ஒருவர் சுமைகொண்டு மலையிறங்கியிருக்கிறான் என்பதை மானுட உழைப்பின் எந்த மகத்துவத்தில் சேர்ப்பது?
அவரை ஊக்கத்தின் தூண்டுகோலாய் நினைத்து மலையேறத் தொடங்கினோம்.
போகும்வழியில் நான்கு நரிகளையும் இரண்டு செந்நாய்களையும் பார்த்தோம்.
13 கிமீ மலையேறியதும் கிடைத்தது அலுப்பும் சோர்வுமல்ல
56 குடும்பங்களின் அன்பும் உறவும்!
அன்றிரவு அங்கு தங்கி வந்த நாளை எப்போதும் நினைவுப்பரணிலிருந்து நீக்கிவிட முடியாது!
அதைப் பிறிதொருநாள் எழுதுகிறேன்.
இதுகுறித்து திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்பதை ஆர்வமாய் அறிந்தபோதும் அதை அண்ணன் விஜய் சேதுபதி தயாரிப்பதும் இந்தப் படத்திற்கு உரையாடலை எங்கள் சித்ராவின் மச்சான் ராசி.தங்கதுரை எழுதியிருப்பதும் மட்டற்ற மகிழ்ச்சி!
திரையரங்கில் நிறைந்திருந்து பார்த்து மகிழ்வோம் <3
ஏனென்றால், இது போன்ற திரைப்படங்கள் கலைத்தாயின் கருவில் எப்போதேனும்தான் உருவாகும்.